நமது வேட்பாளர்
தேர்தல் வாக்குறுதிகள்
1.அங்கீகாரம்: இந்த அறிக்கை நடுத்தர மக்களின் தேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை இந்த தேர்தல் அறிக்கை தெளிவாக காட்டுகிறது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
2.மேம்படுத்தப்பட்ட இந்திய நகரங்கள்: சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா முழுவதும் மெட்ரோ நகரங்களுக்கு அருகில் புதிய நவீன நகரங்களை உருவாக்குவோம் என பாஜக உறுதியளித்துள்ளது. பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து, நகரங்களில் பயண நேரத்தைக் குறைக்கும் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதற்கான வாக்குறுதியையும் பாஜக அளித்துள்ளது.பாதுகாப்பான நகரங்களை உருவாக்குதல், கழிவு நீர் சுத்திகரிப்புக்கான சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்த வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது.